மிரள வைக்கும் காட்சிகளுடன் வெளியானது கங்குவா டீசர்

#Actor #TamilCinema #Movie #Kollywood
Prasu
1 year ago
மிரள வைக்கும் காட்சிகளுடன் வெளியானது கங்குவா டீசர்

2020-ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த 'சூரரைப் போற்று' படத்திற்காக தேசிய விருதைப் பெற்றார் சூர்யா. இதனையடுத்து 2021-ல் இவர் நடித்த ஜெய் பீம் படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள படம் 'கங்குவா'. ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். 

சூர்யா இப்படத்தில் 6 வேடங்களில் நடித்துள்ளார். பாபி டியோல், திஷா பதானி, யோகி பாபு, கோவை சரளா, கே.எஸ் ரவிக்குமார் என பல முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்திய சினிமாவில் மிகப் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் கங்குவா. 10 மொழிகளில் கங்குவா திரைப்படம் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 ந்நிலையில், கங்குவா படத்தின் டீசர் வெளியானது. கங்குவா டீசர், காட்சிக்கு காட்சி மிரள வைக்கும் அளவில் உள்ளது. சூர்யா, கூட்டத்தின் தலைவன் போலவும், போர் வீரை போலவும் தோற்றம் அளிக்கிறார்.

கழுகு, முதலை, புலி மிருக காட்சிகளில் மிகவும் தத்ரூபமாக அமைந்து இருக்கிறது. சூர்யா மிக மூர்க்கதனமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

 டீசர் வெளியீட்டால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!