நாட்டின் வானிலையில் திடீர் மாற்றம்!

#SriLanka #weather #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
நாட்டின் வானிலையில் திடீர் மாற்றம்!

நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையைில் இன்று (20.03) சிறிது மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் முன்னுரைத்துள்ளது. 

குறிப்பாக தென் மற்றும் கிழக்கு மாகாணத்தில் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

அதேபோல் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது. 

தீவின் மற்ற பகுதிகளில்,  வறண்ட வானிலை நிலவுகிறது. சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4