திருவனந்தபுரத்தில் ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசிய நடிகர் விஜய்
#Actor
#TamilCinema
#Kerala
#Movie
#Kollywood
Prasu
1 year ago

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'GOAT' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கேரளாவில் தற்போது நடைபெற்று வருகிறது.
அதற்காக சில தினங்களுக்கு முன்னதாக நடிகர் விஜய் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்தார். நடிகர் விஜய் இன்று திருவனந்தபுரத்தில் GOAT படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களை சந்தித்தார்.
அதன் பின்னர் ரசிகர்களுடன் பேச நினைத்த அவர் மைக்கை எடுத்துக் கொண்டு பஸ் மீது ஏறி நின்று தன்னை சுற்றி இருந்த கேரள ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி அசத்தினார்.
அதில், "சேச்சி... சேட்டன்மார்... ஓணம் பண்டிகையில் நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருப்பீர்களோ அதேபோல தற்போது உங்கள் முகத்தில் அம்மகிழ்ச்சியை பார்ப்பது எனக்கு மிக சந்தோசமாக உள்ளது. தமிழ்நாட்டில் நண்பா, நண்பி மாதிரி நீங்களும் வேற லெவல்ங்க" என்று விஜய் மலையாளத்தில் பேசினார்.



