SLvsBAN Test - 92 ஓட்டங்கள் முன்னிலையில் இலங்கை அணி
#SriLanka
#Test
#Cricket
#Bangladesh
#sports
Prasu
1 year ago

இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இரண்டாவது நாளாகவும் நடைபெற்று வருகிறது.
Sylhet சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறும் இந்த போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சற்றுமுன்னர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 188 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Taijul Islam அதிகபட்சமாக 47 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Vishwa Fernando 4 விக்கெட்டுக்களையும், Kasun Rajitha, Lahiru Kumara ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
முன்னதாக முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 280 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.



