IPL - முதலில் பந்து வீசும் பஞ்சாப் அணி
#Delhi
#IPL
#T20
#Punjab
#2024
Prasu
1 year ago

ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா நேற்று தொடங்கியது. சனிக்கிழமையான இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன.
முதல் போட்டி சண்டிகரில் மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் தவான் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வை செய்துள்ளார்.
டெல்லி அணியில் ரிஷப் பண்ட் களம் இறங்கியுள்ளார். 14 மாதங்களுக்குப் பிறகு அவர் போட்டி கிரிக்கெட்டில் களம் இறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் அணியில் லிவிங்ஸ்டன், பேர்ஸ்டோ, கர்ரன், ரபடா ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.



