கன்னி ராசியினருக்கு பிறரை விமர்சிப்பதால் பிரச்சினைகள் ஏற்படும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 years ago
கன்னி ராசியினருக்கு பிறரை விமர்சிப்பதால் பிரச்சினைகள் ஏற்படும் - ராசிபலன்

மேஷம்

நினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாள். குழந்தைகளின் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். பூமி விற்பனையால் லாபம் கிடைக்கும். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும்.

ரிஷபம்

 யோகமான நாள். பொருளாதார நிலை உயரும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து காரியத்தை முடித்து கொடுப்பர். புதிய பணியாளர்களை சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மிதுனம்

லாபகரமான நாள். விரும்பிய காரித்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையடையும் சந்தர்ப்பம் கைகூடிவரும்.

கடகம் -

இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும் நாள். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் உதவி செய்வர்.

சிம்மம் -

நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்ப பிரச்சினைகள் அகலும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.

கன்னி

பிறரை விமர்சிப்பதால் பிரச்சினைகள் ஏற்படும் நாள். வரன்கள் முடிவடைவதில் தாமதங்கள் உருவாகலாம். மறதியால் அவதிகளுக்கு ஆட்பட நேரிடும். உடல் நலனில் கவனம் தேவை.

துலாம்

ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். வாகன பழுதுகளை சரிசெய்யும் எண்ணம் உருவாகும்.

விருச்சகம்

வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. திட்டமிட்ட காரியமொன்றை மாற்றியமைப்பீர்கள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சியில் தாமதம் ஏற்படும்.

தனுசு -

நன்மைகள் நடைபெறும் நாள். தனவரவு தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக விளங்குவர்.

மகரம்

எதிரிகள் உதிரியாகும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். இனத்தார் பகைமாறும். தேக ஆரோக்கியம் தெளிவு பெறும். பழைய கடன் பாக்கிகளை நாசூக்காக பேசி வசூலிப்பீர்கள்.

கும்பம்

ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வந்து சேரும் நாள். பொதுவாழ்வில் புகழ்கூடும். இடமாற்றம், ஊர்மாற்றம் செய்யும் எண்ணத்தை தவிர்ப்பது நல்லது. கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

மீனம்

ஒளிமயமான வாழ்க்கைக்கு உறுதுணைபுரியும் நாள். உயர்ந்த மனிதர்களின் ஒத்துழைப்பு உண்டு. தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4