2 கோடி மதிப்பிலான ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

#SriLanka #Colombo #Arrest #Police #drugs
Prasu
2 years ago
2 கோடி மதிப்பிலான ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

சுமார் 02 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டியில் போதைப்பொருளை கொண்டு சென்ற போது முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெமட்டகொடை - பேஸ்லைன் வீதியின் சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், ஒருகொடவத்தை 'சப்பா' என தெரியவந்துள்ளது.

 மற்றைய சந்தேகநபரான முச்சக்கர வண்டியின் சாரதி பொரளை - சஹஸ்புர பிரதேசத்தை சேர்ந்தவராவார். பிரதான சந்தேக நபரிடம் இருந்து 1580 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4