IPL - மும்பை அணிக்கு 169 ஓட்டங்கள் இலக்கு
#IPL
#T20
#Gujarat
#Mumbai
#2024
Prasu
1 year ago

ஐபிஎல் தொடரின் 5-வது லீக் போட்டியில் மும்பை- குஜராத் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் - சகா களமிறங்கினர். 15 ரன்களில் சகா பும்ரா பந்து வீச்சில் போல்ட் ஆனார்.
அவர் அவுட் ஆன சிறிது நேரத்தில் கில் 31 ரன்னில் வெளியேறினார். நிதானமாக விளையாடிய சுதர்சன் 45 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஓமர்சாய் 17, மில்லர் 12, தெவாட்டியா 22 என வெளியேற இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் சேர்த்தது.
மும்பை தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.



