IPL - மும்பையை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ்
ஐபிஎல் தொடரின் 5-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகிறது.
இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய குஜராத் அணி 168 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 45 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித்- இஷான் கிஷன் களமிறங்கினர். இஷான் 0 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த நமன் அதிரடியாக விளையாடி 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து ரோகித்- ப்ரீவிஸ் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் 43 ரன்களிலும் ப்ரீவிஸ் 46 ரன்களிலும் அவுட் ஆகினர்.
இதனையடுத்து திலக் வர்மா 25, டிம் டேவிட் 11, ஜெரால்ட் கோட்ஸி 1 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தை பாண்ட்யா சிக்சருக்கும் 2-வது பந்தை பவுண்டரிக்கும் விரட்டினார்.
3-வது பந்தில் ஆட்டமிழந்தார். இறுதியில் குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குஜராத் அணி தரப்பில் ஓமர்சாய், ஸ்பென்சர் ஜான்சன், மோகித் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை தோல்வியடைவது தொடர்கிறது.