ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல்களைச் சேர்ந்த ஐவர் கைது!

#SriLanka #Arrest #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல்களைச் சேர்ந்த ஐவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்களை கைது செய்யும் விசேட நடவடிக்கையின் கீழ் மேலும் ஐந்து கும்பல் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மினுவாங்கொடை பன்சிலுபுர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பெப்ரவரி 16ஆம் திகதி மினுவாங்கொடை பொரகொடவத்த பிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

 இதேவேளை, கெசல்வத்தை, செபஸ்டியன் வீதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மேலும் ஒரு குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

 சந்தேக நபரிடம் இருந்து 05 வாள்கள் மற்றும் 02 கிராம் ஐஸ் போதைப்பொருள் 680 மில்லிகிராம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் வெளிநாடுகளில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். 

 கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினர் கொலன்னாவ பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 03 கிராம் 190 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை, நேற்று மாலை பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகாமையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 2 கிராம் 230 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் திட்டமிட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொரளை பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4