மைத்திரி விவகாரம்: பாதுகாப்பு அமைச்சருக்கு மேர்வின் சில்வா விடுத்த எச்சரிக்கை!

#SriLanka #Easter Sunday Attack
Mayoorikka
2 years ago
மைத்திரி விவகாரம்: பாதுகாப்பு அமைச்சருக்கு மேர்வின் சில்வா விடுத்த எச்சரிக்கை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்த அன்று, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூரில் காதல் மோகத்தில் இருந்தார் என்றும், இதனை நான் அன்றிலிருந்து கூறி வருவதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்திருந்தார்.

 மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யாரென தனக்குத் தெரியும் என அண்மையில் கண்டியில் நடந்த ஊடக சந்திப்பின் போது தெரிவித்த கருத்தானது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

 இதுகுறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த மேர்வின் சில்வா, மைத்திரிபால சிறிசேன இன்று நேற்று அல்ல, அன்று ஜனாதிபதியாக்கிய ரணில் விக்கிரமசிங்கவையே யாருக்கும் தெரியாமல் பதவியில் இருந்து நீக்கி மஹிந்த ராஜபக்ஷவை பதவியில் அமர்த்தியவர். ஈஸ்டர் தாக்குதல் நடந்த அன்று மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூரில் காதல் மோகத்தில் உல்லாசமாக இருந்தார். இதனை நான் கூற பயப்ப மாட்டேன். 

 அன்றும் இதையே நான் கூறினேன். பாவத்திற்கு ஜனாதிபதியான இவர் யாராவது சிக்குவார்களா எனப் பார்க்க இப்போது ஒரு சூழ்ச்சியை மேற்கொள்கிறார்.

 மைத்திரி மீது விசாரணை நடத்த முன்னர் அவர் சிறைபிடிக்கப்பட வேண்டும். அன்று கெஹெலியவை சிறைபிடித்தது போன்று, மைத்திரியும் சிறைக்காவலில் இருக்க வேண்டும். டிரான் அலஸ் அமைச்சரே, மைத்திரி கைது செய்யப்படாவிடின் அடுத்த குரல் பதிவில் எனது டார்கட் நீங்களாகத்தான் இருக்கும். என எச்சரித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4