வாழைச்சேனை பகுதியில் மீன்பிடி வலையில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வாழைச்சேனை பகுதியில் மீன்பிடி வலையில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு!

வாழைச்சேனை, புனானி ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் தான் பயன்படுத்திய மீன்பிடி வலையில் சிக்கி உயிரிழந்துள்ளார். 

 உயிரிழந்தவரின் தந்தை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் நேற்று (25.03) மாலை செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

 புனானி, மைலதென்ன, அத்தே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

 உயிரிழந்தவர் சுகயீனம் காரணமாக வீட்டில் வேலையில்லாமல் இருந்ததாகவும், புனானி ஏரியில் மீன்பிடி வலையை சுமந்து சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

 சடலம் நீதவான் பரிசோதனைக்காக வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4