பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் விடுத்த உத்தரவு!

#SriLanka #Police
Mayoorikka
2 years ago
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் விடுத்த உத்தரவு!

எதிர்வரும் காலங்களில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சொந்த ஊரில் கடமையில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள்முதல் கான்ஸ்டபிள்கள் வரையிலான பதவி நிலைகளை வகிப்பவர்கள் இவ்வாறு சொந்த ஊரில் பணியாற்ற இடமளிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 இதேவேளை எதிர்வரும் காலங்களில் சொந்த ஊரில் அல்லது அவர்களது மனைவியரின் சொந்த ஊரிலும் கடமையில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 இதற்கமைய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், துறைசார் பொறுப்பதிகாரிகள்முதல் கான்ஸ்டபிள்கள் வரையிலான பதவி நிலைகளை வகிப்பவர்கள் தங்களது ஊரில், மிக அருகாமையில் அல்லது மனைவியின் ஊரில் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளார்களா? என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உத்தரவிட்டுள்ளார்.

 மேலும் இதற்காக விசேட குழுவொன்றை பொலிஸ் மா அதிபர் நியமித்துள்ளதுடன் சொந்த ஊரில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4