வடமாகாண விவசாயிகளின் மின்கட்டணம் குறைக்கப்படும்!

#SriLanka #NorthernProvince #Agriculture
Mayoorikka
2 years ago
வடமாகாண விவசாயிகளின் மின்கட்டணம் குறைக்கப்படும்!

விவசாயத் தேவைகளுக்காக மின்சாரத்தைப் பயன்படுத்தும் வடமாகாண விவசாயிகளின் மின் கட்டணத்தைக் குறைப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

 விவசாய நடவடிக்கைகளில் பெரும் முயற்சியுடன் அனைத்துப் பணிகளையும் முன்னெடுப்பதற்கு வடமாகாண மக்களின் அர்ப்பணிப்பை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அபிவிருத்தி நடவடிக்கைகளை அமுல்படுத்தும் போது அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்படும் பணத்தின் பெரும்பகுதியை வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கே ஒதுக்க வேண்டும் என ஜனாதிபதி ஆலோசனை வழங்கியதாக அமைச்சர் தெரிவித்தார். 

 வடமாகாணத்தில் 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அந்த பிரச்சனைகளுக்கு மத்தியிலும் அவர்கள் விவசாயத்தை கைவிடவில்லை. எனவே வடமாகாண விவசாயிகள் தமது விவசாய நடவடிக்கைகளுக்கு மின்சாரத்தை பயன்படுத்தும் போது ஓரளவு நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். 

 அதற்கமைவாக விவசாய தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் மின்சாரக் கட்டணங்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கும் வகையில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4