நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மி.மீற்றர் மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு!

#SriLanka #weather #Rain #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மி.மீற்றர் மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு!

இலங்கையின் பல பகுதிகளில் இன்று  (27.03)  மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாதகமான வளிமண்டல நிலை உருவாகியுள்ளதாக முன்னறிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், 2.00 மணிக்குப் பிறகு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும், மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் காலை வேளையில் மழை பெய்யும். மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.  

இடியுடன் கூடிய மழை,தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4