வவுனியாவில் நடமாடும் சேவை மூலம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு!

#SriLanka #Vavuniya #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வவுனியாவில் நடமாடும் சேவை மூலம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு!

வவுனியா நகரசபையின் குடியிருப்பு வட்டாரத்திற்கான நடமாடும் சேவைமூலம் பல்வேறு பொதுமக்கள் குறைகள் நிவர்த்திசெய்யப்பட்டது.  

வவுனியா நகரசபையினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் தங்கள் பிரதேசங்களுக்கே வருகை தந்து வழங்கும் நோக்கில் சபையால் அறிமுகப்படுத்தப்பட்ட நடமாடும் சேவை குடியிருப்பு வட்டாரத்தில் இன்று (27.03) இடம்பெற்றது.  

images/content-image/1711525251.jpg

இந்நடமாடும் சேவையில் ஆதன வரி செலுத்த கூடிய வசதிகள்,ஆதன பெயர் மாற்ற சேவைகள், கட்டட அனுமதி வழங்குதல், வீதி எல்லைக்கோட்டு சான்றிதழ் வழங்குதல்,வியாபார உரிமம் வழங்குதல், வடிகால்கள் சுத்திகரிப்பு உட்பட இருபதுக்கும் மேற்ப்பட்ட சேவைகள் வழங்கப்பட்டன.  

அத்துடன் குண்டும் குளியுமாக காணப்பட்ட பூந்தோட்டம் பிரதானவீதி, திருத்தியமைக்கப்பட்டதுடன், லயன்ஸ் விளையாட்டுக்கழக மைதானம் நீர் பாய்ச்சி திருத்தியமைக்கப்பட்டது.  

நகரசபையின் செயலாளர்  தயாபரன் அவர்களின் வழிகாட்டல்மேற்பார்வையில் இடம்பெற்ற இச்சேவைகளில் நகரசபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கான பெறுமதியான சேவைகளை வழங்கியிருந்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4