இந்தியாவில் அரசியல் தலைவர்களை குறி வைத்து குண்டுத் தாக்குதல் - உளவுத்துறை எச்சரிக்கை

#India #Election
Lanka4
2 months ago
இந்தியாவில் அரசியல் தலைவர்களை குறி வைத்து குண்டுத் தாக்குதல் - உளவுத்துறை எச்சரிக்கை

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் தலைவர்களை குறி வைத்து குண்டு தாக்குதல் உள்ளிட்ட நாசகார அழிவுகளை ஏற்படுத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தேர்தல் பிரசாரத்தை குறிவைத்து குண்டுத் தாக்குதல்கள் நடத்த வாய்ப்புகள் உள்ளதாகவும், மிகுந்த எச்சரிக்கையோடு இருக்குமாறும் மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்படவுள்ளன. தமிழகத்தில் முதல் கட்ட தேர்தல் எதிர்வரும் மாதம் 19ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அனைத்து மாநிலங்களிலும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை பொலிஸாரும் , இராணுவ படையினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலும் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளனர்.

 அந்த வகையில் அவர்கள் இந்தியாவில் தேர்தலை சீர்குலைக்கும் வகையில் குண்டு வெடிப்பு தாக்குதல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.