மருத்துவரின் பற்றுச்சீட்டு இல்லாமல் விநியோகம் செய்யப்படும் க்ரீம்களால் ஆபத்து!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மருத்துவரின் பற்றுச்சீட்டு இல்லாமல் விநியோகம் செய்யப்படும் க்ரீம்களால் ஆபத்து!

மருத்துவரின் பரிந்துரை சீட்டில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய மருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டு வரப்பட்டு சருமத்தை ஒளிரச் செய்யும் க்ரீம் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. 

தோல் நோய்களுக்கான மருந்தாக விசேட வைத்தியர்களால் மாத்திரம் பரிந்துரைக்கப்படும் மருந்து வகையொன்று கொழும்பில் உள்ள வாசனை திரவியங்கள் மற்றும் கிரீம் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. 

குறித்த க்ரீமை இந்த கடைகளில் கொள்வனவு செய்யும் சிலர் சாதாரண க்ரீம்களில் கலந்து சருமத்தை பளபளக்கும் மருந்தாக விற்பனை செய்வதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிறிது காலத்திற்குள் சருமம் வெள்ளையாகிவிடும் என்ற கருத்து நிலவுவதால், மருந்து விற்பனை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் மேற்படி விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும் குறித்த மருந்தானது, மருத்துவரின் பரிந்துரைப்படி மிகக் குறைந்த காலத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மருந்துப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, இந்த மருந்துகள் அனைத்தையும் அதிகாரிகள் தங்கள் காவலில் எடுத்து விற்பனை செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4