மியன்மாருடனான எல்லைப் பகுதியில் வேலி அமைக்கும் இந்தியா!
மியான்மர் உடனான தனது எல்லையை பாதுகாக்க இந்தியா 1,610-கிமீ வேலியமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக 3.7 பில்லியன் செலவழிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க, குறித்த வேலி அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காகவும், அதன் வடகிழக்கு பிராந்தியத்தின் மக்கள்தொகை கட்டமைப்பைப் பராமரிக்கவும், எல்லைக் குடிமக்களுக்கு ஆட்சி கவிழ்க்கப்பட்ட மியான்மருடன் பல தசாப்தங்களாக விசா இல்லாத இயக்கக் கொள்கையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காகவும் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுடெல்லி அறிவித்துள்ளது.
இம்மாத தொடக்கத்தில் ஒரு அரசாங்கக் குழு, வேலி அமைப்பதற்கான செலவுக்கு ஒப்புதல் அளித்தது, இதற்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இந்தியாவின் இந்த திட்டம் குறித்து மியன்மார் எவ்வித பதில்களையும் வழங்கவில்லை.