இலங்கையில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாண பணிகளை உடனடியாக ஆரம்பிக்க சீனா விரும்பம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கையில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாண பணிகளை உடனடியாக ஆரம்பிக்க சீனா விரும்பம்!

இந்த நாட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க சீனாவின் சினோபெக் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.  

இது தொடர்பில் சினோபெக் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று தமக்கு அறிவித்ததாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்  காஞ்சன விஜேசேகர விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.  

குறித்த கலந்துரையாடல் நேற்று (27.03) கொழும்பில் இடம்பெற்றது. 

புதிய சுத்திகரிப்பு நிலையம் ஹம்பாந்தோட்டையில் நிறுவப்படவுள்ளதுடன், அது தொடர்பான ஒப்பந்தத்தில் விரைவில் கைச்சாத்திடுவதற்கு சினோபெக் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.  

திட்டத்திற்கான முதலீட்டை அதிகரிக்கவும், சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை அதிகரிக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டு, ஜூன் மாதம் திட்டம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த நவம்பரில் அமைச்சரவை இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4