யூடியூபில் பிரபலமான தாத்தா மருத்துவமனையில் அனுமதி
#India
#Hospital
#Social Media
#Youtube
#Youtuber
Prasu
8 months ago
யூ-டியூபில் பிரபலமான வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியதம்பி, இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து பெரியதம்பியின் பேரன் சுப்பிரமணியன் வேலுசாமி தனது எக்ஸ் பக்கத்தில் தகவல் பகிர்ந்துள்ளார். அவர், “தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. விரைவில் மீண்டு வருவார்” எனப் பதிவிட்டுள்ளார்.
வில்லேஜ் குக்கிங் சேனல் என்கிற பெயரில் சமையல் விடியோக்களை இவர்கள் பதிவிட்டு வருகிறார்கள். விக்ரம் படத்தில் ஒரு காட்சியில் வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினர் இடம்பெற்றனர்.
அதேபோன்று ராகுல் காந்தி கலந்துகொண்ட சமையல் விடியோ ஒன்றையும் வெளியிட்டனர். இந்த விடியோ பல கோடிப் பார்வைகளைத் தாண்டி உலகளவில் கவனத்தை ஈர்த்தமை குறிப்பிடத்தக்கது.