IPL - 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி

#Delhi #IPL #T20 #Rajasthan #2024
Prasu
7 months ago
IPL - 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 9 ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. ஜெய்பூரில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 7 பந்துகளில் 5 ரன்களை குவித்து பெவிலியன் திரும்பினார். இவருடன் களமிறங்கிய ஜாஸ் பட்லர் 16 பந்துகளில் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்களில் தனது விக்கெட்டை பறிக் கொடுத்தார். போட்டி முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை குவித்துள்ளது. ராஜஸ்தான் அணிக்கு ரியான் பராக் 45 பந்துகளில் 84 ரன்களை குவித்தார். ஹெட்மயர் 7 பந்துகளில் 14 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

டெல்லி அணி சார்பில் கலீல் அகமது, அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். முகேஷ் குமார் மற்றும் அன்ரிச் நார்ட்ஜே தலா விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 186 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. 

டெல்லி அணிக்கு டேவிட் வார்னர் சிறப்பான துவக்கம் கொடுத்தார். இவர் 34 பந்துகளில் 49 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய மிட்செல் மார்ஷ் 12 பந்துகளில் 23 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிக்கி புய் ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றினார். பிறகு களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட் 28 ரன்களை குவித்தார்.

இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிய அபிஷேக் பொரெல் 9 ரன்களில் ஆட்டமிழக்க அக்சர் பட்டேல் களத்துக்கு வந்தார். ட்ரிஸ்டன் டப்ஸ்-உடன் பொறுப்பாக ஆடிய அக்சர் பட்டேல் 15 ரன்களை குவித்தார்.

போட்டி முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை குவித்தது. இதன் மூலம் ராஜஸ்தான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ராஜஸ்தான் சார்பில் நான்ட்ரி பர்கர் 2 விக்கெட்டுகளையும், சாஹல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 ஆவேஷ் கான் ஒரு விக்கெட் எடுத்தார். இந்த சீசனில் ராஜஸ்தான் அணி விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!