வறுமையற்ற ஆசியாவை கட்டியெழுப்ப பிரதமர் தினேஷ் குணவர்த்தன அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு!

#SriLanka #Dinesh Gunawardena #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வறுமையற்ற ஆசியாவை கட்டியெழுப்ப பிரதமர் தினேஷ் குணவர்த்தன அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு!

ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார்.  

சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரையொன்றை நிகழ்த்தியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளுக்கும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். 

விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

இந்த மாநாட்டில் உரையாற்றும் போது, கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாக பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4