ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் பள்ளத்தாக்கில் கவிழந்து விபத்துக்குள்ளான கார் : 10 பேர் உயிரிழப்பு!

#India #SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 month ago
ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் பள்ளத்தாக்கில் கவிழந்து விபத்துக்குள்ளான கார் : 10 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் ராம்பன் பகுதியில் உள்ள பேட்டரி சாஷ்மா அருகே கார்ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஏறக்குறைய 10 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகனம் ஸ்ரீநகரில் இருந்து ஜம்மு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது அதிகாலை 1.15 மணியளவில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. 

விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும், உள்ளூர் காவல்துறை, மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), மற்றும் சிவில் விரைவுப் பதிலளிப்புக் குழு (QRT) ரம்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

பலத்த மழைக்கு மத்தியில் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.