முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை : இளைஞர் கைது!

#SriLanka #Mullaitivu #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை : இளைஞர் கைது!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குளபகுதியில் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன், சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த இளைஞன் ஒருவரை பொலிஸார் நேற்று (28.03) கைது செய்துள்ளனர். 

புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குளத்தின் அருகிலுள்ள காட்டு பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி இடம்பெற்று வருவதாக கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல்களை அடுத்து சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

images/content-image/1711688228.jpg

இதன்போது   கசிப்பு 56,000 மில்லிலீற்றர், 3 பரல்களுக்குள் 75,000 மில்லி மீற்றர் எரிந்த கோடாவும், கசிப்பு உற்பத்தியாக்குவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன்  உடையார்கட்டு தெற்கு மூங்கிலாறு பகுதியினை சேர்ந்த 23 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை  முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4