வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை பெற்றுக்கொள்வது தொடர்பில் வவுனியாவில் நடமாடும் சேவை முன்னெடுப்பு!

#SriLanka #Vavuniya #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை பெற்றுக்கொள்வது தொடர்பில் வவுனியாவில் நடமாடும் சேவை முன்னெடுப்பு!

வவுனியாவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் நடமாடும் சேவையொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

“நானே ஆரம்பம் வெல்வோம் ஸ்ரீலங்கா -SMART சூரன்களோடு” எனும் தொணிப்பொருளில் இடம்பெறும் குறித்த நடமாடும் சேவையானது  வவுனியா காமினிமகாவித்தியால விளையாட்டரங்கில் இன்று (29.03)  இடம்பெற்றது.  

தேசியமற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுசநாணயக்கார கலந்துகொண்டார். 

images/content-image/1711695073.jpg

குறித்த நடமாடும் சேவையில் தொழிலாளர் திணைக்களம்,ஊழியர் நம்பிக்கை நிதியம்,வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள், சிறுதொழில் அபிவிருத்திபிரிவு, தொழிற்பயிற்சிஅதிகாரசபை உட்பட பத்திற்கும் மேற்ப்பட்ட நிறுவனங்கள் தமது சேவைகளை வழங்கியிருந்தன. 

அத்துடன் ருமேனியா,மத்திய கிழக்கு நாடுகள்,இஸ்ரேல், ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் தொழில் ஒன்றை பெற்றுக்கொள்வது தொடர்பாக முகவர் நிறுவனங்களால் தெளிவூட்டல்களும் வழங்கிவைக்கப்பட்டன. 

நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தான்,அபிவிருத்திக்குழு தலைவர் கு.திலீபன்,மாவட்ட அரசஅதிபர் சரத்சந்திர,பிரதேச செயலாளர்கள், உட்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4