தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஒருவர் உயிரிழப்பு : விசாரணைகள் ஆரம்பம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஒருவர் உயிரிழப்பு : விசாரணைகள் ஆரம்பம்!

ராகம போதனா வைத்தியசாலையில் தடுப்பூசி போடப்பட்ட நிலையில் நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை மட்டத்திலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக ராகம போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சம்பத் ரணவீர தெரிவித்தார்.

கோ-அமோக்ஸிக்லாவ் என்ற தடுப்பூசியை செலுத்திய பிறகு நோயாளி உயிரிழந்துள்ளார். எனினும் தடுப்பூசியினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக மரணம் ஏற்பட்டதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் 50 வயதுடையவர் எனவும் காது தொடர்பான சுகயீனம் காரணமாக கடந்த 22ஆம் திகதி ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4