இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

#weather #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (31.03)  இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் முன்னுரைத்துள்ளது. 

மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் பிற்பகல்  2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது. 

இடியுடன் கூடிய மழை  தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4