அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் சுகாதார தொழிற்சங்கங்கள்!

#SriLanka #strike #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் சுகாதார தொழிற்சங்கங்கள்!

சம்பள பிரச்சினையை முன்னிறுத்தி இன்று (01.04) அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. 

தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளில் இன்று காலை 6.30 மணி முதல் பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.  

இன்றைய தினம் தமது பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்க அதிகாரிகள் தவறினால் நாளை (02.04) முதல் நாடளாவிய ரீதியில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இதன்படி நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் 4 மணித்தியால வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

எவ்வாறாயினும்  இன்று ஜனாதிபதி அலுவலகம் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்த அவர், இதன்காரணமாக வேலைநிறுத்தத்தை 5 வைத்தியசாலைகளுக்கு மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் கூறியுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4