சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம்!

#SriLanka #Parliament #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம்!

சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. ஆயுர்வேத சட்டத்தின் கீழான உத்தரவுகள் மீதான விவாதம் இன்று (01.04) இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

]நாளை (02.04) பரேட் சட்டத் திருத்தம் தொடர்பான வங்கித் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறவுள்ளது. 

அதுமட்டுமின்றி, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான உத்தரவுகள், பெறுமதி சேர் வரி சட்டத்தின் கீழான விதிமுறைகள் மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழான ஒழுங்குமுறைகள் மீதான விவாதம் நாளை நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.  

இதேவேளை, அரசாங்க நிதி தொடர்பான குழு மற்றும் அரசாங்க கணக்குகள் தொடர்பான குழுவும் நாளை கூடவுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் அன்றைய தினம் அரசாங்க கணக்குகள் குழுவின் முன் அழைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4