யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியில் வாள்வெட்டு : இளைஞரின் கை துண்டிப்பு!

#Jaffna #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியில் வாள்வெட்டு : இளைஞரின் கை துண்டிப்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் நேற்றிரவு (31.04) வாள் வெட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.  

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்றிரவு வாள்களுடன் சென்ற குழு ஒன்று பருத்தித்துறை தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் உள்ள நபர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது. 

இதில் படுகாயமடைந்த நபரின் கை கீழே விழுந்த நிலையில்,  கீழே வீழ்ந்த கை துண்டையும் ஏடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

வாள் வெட்டுக்கு இலக்கான நபர் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதானா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  

கையை இழந்தவர் செல்வநாயகம் செந்தூரன் எனும் 30 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஆவார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4