மன்னாரில் இளம் குடும்பஸ்தரை கொடூரமாக தாக்கிய பொலிஸார்!

#SriLanka #Mannar #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மன்னாரில் இளம் குடும்பஸ்தரை கொடூரமாக தாக்கிய பொலிஸார்!
மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இணைந்து இன்று (2.03) காலை மன்னார் பொலிஸ் நிலையம் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் மீது கடுமையான தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். 

குறித்த குடும்பஸ்தர் காயங்களுக்கு உள்ளான நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

இவ்விடயம் குறித்து தாக்குதலுக்கு உள்ளான குடும்பஸ்தர் ஊடகத்திற்கு கருத்து வெளியிட்டுள்ளார். 

மன்னார் பள்ளிமுனை கிராமத்திற்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை மன்னார் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இரு பொலிஸார் சென்று பிரிதொரு நபரின் பெயரை கூறி அவரை விசாரித்து உள்ளனர்.  

இதன் போது குறித்த வீட்டில் தாக்குதலுக்கு உள்ளான பிரதீபன் (வயது-42) என்ற குடும்பஸ்தர் இருந்துள்ளார்.   அங்கு சென்ற பொலிஸார் வீட்டின் உரிமையாளரை கேட்ட போது அவர் இல்லை என தெரிவித்துள்ளனர். உடனடியாக குறித்த குடும்பஸ்தரின் இரு கையடக்க தொலைபேசியும் பறித்ததோடு,அவருடைய மோட்டார் சைக்கிளையும் எடுத்துக் கொண்டு மன்னார் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.  

இந்த நிலையில் குறித்த குடும்பஸ்தர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (21) காலை மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய சென்றுள்ளார்.  

இதன் போது அங்குள்ள அதிகாரிகள் மன்னார் பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாட்டை பதிவு செய்து விட்டு வருமாறு தெரிவித்தனர். இந்த நிலையில் குறித்த குடும்பஸ்தர் மன்னார் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்.  

இதன் போது மோட்டார் சைக்கிளின் ஆவணங்களை கேட்டுள்ளனர். அவர் ஆவணங்களை பொலிஸாரிடம் வழங்கியுள்ளார். பின்னர் கையடக்க தொலைபேசி மற்றும் மோட்டார் சைக்கிலை கேட்டபோது மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூரிய ஆயுதம் ஒன்றினால் பல தடவைகள் தன்னை தாக்கியதாக தெரிவித்துள்ளார். 

இதனை பொது மக்கள் மற்றும் ஏனைய பொலிஸார் பார்த்துக் கொண்டு இருந்தனர். அவர் கட்டு மிராண்டி தனமாக நடந்து கொண்டார். என்னிடம் எவ்வித விசாரனைகளும் மேற்கொள்ளவில்லை. என்னிடம் பறித்த பொருட்களையும் தரவில்லை. 

என்ன போக சொன்னார்கள். நான் வைத்தியசாலைக்கு வந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார். 

குறித்த குடும்பஸ்தர் மன்னார் பொலிஸாரால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அவரது மனைவி மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4