வவுனியாவில் பல இலட்சம் பணத்துடன் பெறுமளவு கஞ்சா மீட்பு -மூவர் கைது

#SriLanka #Vavuniya #Police
Soruban
2 years ago
வவுனியாவில் பல இலட்சம் பணத்துடன் பெறுமளவு கஞ்சா மீட்பு -மூவர் கைது

வவுனியா விசேட குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் துரிதமாக செயல்பட்ட பொலிஸார் கார் வாகனம் ஒன்றில் கடத்திச்செல்லப்பட்ட ஒன்பது கிலோகிராம் கஞ்சா மற்றும் பத்தொன்பது இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளதுடன் காரில் பயணித்த வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவரும் ஒட்டிசுட்டான் பகுதியை சேர்ந்த 25வயதுடைய நபர் மற்றும் வவுனியாவை சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரும் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயணித்த காரையும் பொலிஸாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

வவுனியா குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரிஷ்வி தலமையிலான குழுவினரே குறித்த கைதை மேற்கொண்டுள்ளனர் மேலும் கைது செய்யப்பட்டவர்களை விசாரனைகளை முடித்த பின்னர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4