கடந்த 8 வருடங்களாக எதிர்க்கட்சி தலைவர் இல்லத்தில் தங்கியிருக்கும் சம்பந்தன்! சர்ச்சையை கிளப்பும் சிங்கள ஊடகம்

#SriLanka #R. Sampanthan
Mayoorikka
2 years ago
கடந்த 8 வருடங்களாக எதிர்க்கட்சி தலைவர் இல்லத்தில் தங்கியிருக்கும் சம்பந்தன்! சர்ச்சையை கிளப்பும் சிங்கள ஊடகம்

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் கொழும்பு 7, மஹகமசேகர மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சுமார் எட்டு வருடங்களாக தங்கியிருந்ததாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

 கடந்த காலத்தில் காணி மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சராக இருந்த கயந்த கருணாதிலக்க சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் கிடைத்ததையடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் வரை இந்த வீடு அவருக்கு பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

 சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவியிலிருந்து அண்மையில் விலகியிருந்தார். இப்போது அவர் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே.

 கடந்த ஆகஸ்ட் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் பின்னர், ஆர் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றபோது இந்த உத்தியோகபூர்வ இல்லம் அவருக்கு வழங்கப்பட்டது.

 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டதன் மூலம் உருவாக்கப்பட்ட 52 நாள் ஆட்சி மாற்றத்தின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்ற போதும் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றார் என அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. .

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4