சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள்!

#SriLanka #Festival #Bus
Soruban
2 years ago
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு  இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள்!

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் விசேட பேருந்து சேவைகள் இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அதேநேரம், இந்த சேவைகளுக்காக 1,000 அரச பேருந்துகள் தயார் நிலையில் உள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 10, 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் பயணிகளின் தேவையின் அடிப்படையில் மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, சித்திரை புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 9ஆம் திகதி முதல் விசேட பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அதேநேரம், புத்தாண்டு காலத்தில் விசேட தொடருந்து சேவைகளையும் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இந்த விசேட தொடருந்து சேவைகள் அமுல்படுத்தப்படும் என தொடருந்து பொது முகாமையாளர் என். ஜே. இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4