மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விலகும் ரோகித் சர்மா
ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் அதிகமாக பேசப்படும் விஷயமாக மும்பை இந்தியன்ஸ் உள்ளது.
இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித்தை நீக்கி பாண்ட்யாவை நியமித்தது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது.
இதனால் மும்பை இந்தியன்ஸ் விளையாடும் மைதானங்களில் பாண்ட்யாவுக்கு எதிராகவும் ரோகித் சர்மாவுக்கு ஆதரவாகவும் ரசிகர்கள் கோஷமிட்டு வந்தனர். பாண்ட்யா தலைமையில் விளையாடிய முதல் 3 போட்டிகளிலும் மும்பை அணி தோல்வியை தழுவியது.
இதற்கு பாண்ட்யாவின் கேப்டன்சி தான் காரணம் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டி வந்தனர். முதல் போட்டியில் ரோகித் சர்மாவை ஹர்திக் பீல்டிங் நிற்க கூறியது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
அதற்கு ரசிகர்களிடம் இருந்து எதிர்ப்பு அதிகமாகியது. இந்த போட்டியில் பாண்ட்யா மீது ரோகித் கோபத்துடன் பேசுவார் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இந்நிலையில் இந்த சீசனுடன் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ரோகித் சர்மா விலகவுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாண்ட்யாவின் கேப்டன்சி ரோகித் சர்மாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் போட்டியில் ஹர்திக் மற்றும் ரோகித் சர்மாவின் முடிவில் முரன்பாடு ஏற்படுவது அணிக்கு பின்னடைவாக உள்ளது.
இது போட்டியில் மட்டுமல்லாமல் ஓய்வு அறையிலும் தொடர்கிறது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ரோகித் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.