வவுனியாவில் புகையிரத விபத்தில் ஒருவர் படுகாயம் - புகையிரதம் சேதம்

#SriLanka #Vavuniya #Accident #Hospital #Train #Rescue #vehicle
Prasu
2 years ago
வவுனியாவில் புகையிரத விபத்தில் ஒருவர் படுகாயம் - புகையிரதம் சேதம்

வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்,அனுராதபுரத்திலிருத்து யாழ் நோக்கிச்சென்றுகொண்டிருந்த புகையிரதம் ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, கடவையினை கடக்கமுற்பட்ட கப் வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது விபத்தில் கப் வாகனம் கடுமையான சேதமடைந்ததுடன் அதன் சாரதி படுகாயமைடந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் புகையிரதத்தின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளது. இதனையடுத்து பயணிகள் இறக்கப்பட்டு மற்றொரூ புகையிரதத்தில் ஏற்றப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டனர்.

images/content-image/1712391354.jpg

இதேவேளை குறித்த பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் சிலவருடங்களுக்கு முன்பு இடம்பெற்ற விபத்தில் நான்குபேர் சாவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. விபத்து தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

images/content-image/1712391364.jpg

images/content-image/1712391374.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4