மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் வந்துள்ள புதிய மாற்றம்!

#SriLanka
Mayoorikka
2 years ago
மாற்றுத்திறனாளிகள் தொடர்பில்  வந்துள்ள புதிய மாற்றம்!

இம்முறை புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது மாற்றுத்திறனாளிகள் குறித்து. சமுதாயத்தில் கருத்தியல் ரீதியிலான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, முட்டி உடைத்தல் குருடனுக்கு உணவளித்தல் என்பன 'அதிர்ஷ்ட பானையை உடைத்தல், பார்வையற்றவர்களுக்கு உணவளித்தல்' என மாற்றப்பட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார்.

 ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வருட புத்தாண்டுக்காக சமுர்த்தி வேலைத்திட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் இணைந்து நாடளாவிய ரீதியில் 1089 புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளன. அதன்போது மாற்றுத்திறனாளிகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.  

முட்டி உடைத்தல் குருடர்களுக்கு உணவளித்தல்' என்ற அம்சங்கள் சமூகத்தால் இதுவரை நிராகரிக்கப்பட்டுள்ளன. அதனை எமது அமைச்சும் ஏற்றுக்கொண்டுள்ளது. அதற்கு பதிலாக, 'அதிர்ஷ்டத்தின் பானையை உடைத்தல் மற்றும் தோழனுக்கு உணவளித்தல்' என்ற பெயர்களைப் பயன்படுத்துமாறு ஏற்பாட்டாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதன் மூலம் சமூகத்தில் கருத்தியல் ரீதியிலான மாற்றத்தை உருவாக்க எதிர்பார்க்கிறோம். மேலும், புத்தாண்டு விழாக்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளோம் என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4