கடந்த ஆண்டு வடமாகாணத்தில் மட்டும் 50 பேர் நீரில் மூழ்கி பலி

#SriLanka #NorthernProvince #Death #water #2023 #drowned
Prasu
2 years ago
கடந்த ஆண்டு வடமாகாணத்தில் மட்டும் 50 பேர் நீரில் மூழ்கி பலி

வடமாகாணத்தில் கடந்த ஆண்டு நீரில் மூழ்கி 50 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் கிளிநொச்சி மாவட்டத்திலையே அதிகளவான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

யாழ்ப்பாண பொலிஸ் பிராந்தியத்தில் 13 பேரும் , காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் 02 பேரும் , மன்னார் பொலிஸ் பிராந்தியத்தில் 06 பேரும் , வவுனியா பொலிஸ் பிராந்தியத்தில் 05 பேரும், முல்லைத்தீவு பொலிஸ் பிராந்தியத்தில் 08 பேரும் மற்றும் கிளிநொச்சி பொலிஸ் பிராந்தியத்தில் 16 பேருமாக வடக்கில் 50 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

“நாளாந்தம் இரண்டு அல்லது மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர். எங்களின் தகவல்களின்படி வருடாந்தம் 700 – 800 பேர் இவ்வாறு இறக்கின்றனர். 

 பண்டிகை காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது” என சுகாதார அமைச்சின் தொற்றா நோய், விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் தலைவர் சமூக வைத்திய நிபுணர் சமித்த சிறிதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4