கிளிநொச்சியில் சடுதியாக குறைவடைந்துள்ள காய்கறிகளின் விலைகள்! விவசாயிகள் பாதிப்பு

#SriLanka #Kilinochchi #prices #Vegetable
Mayoorikka
2 years ago
கிளிநொச்சியில் சடுதியாக குறைவடைந்துள்ள காய்கறிகளின் விலைகள்! விவசாயிகள் பாதிப்பு

தற்பொழுது கிளிநொச்சி மாவட்டத்தில் காய்கறிகளின் விலை சடுதையாக குறைவடைந்துள்ளமையால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். 

 ஒரு கிலோ கத்தரிக்காய் 150 ரூபாய் வரையிலும், பயிற்றை 100 ரூபாய் வரையிலும், பூசணி 100 ரூபாய் ஏனைய காய்கறிகளும் 150 ரூபாய் தொடக்கம் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

images/content-image/2024/04/1712809173.jpg

 இதன் காரணமாக தோட்டச் செய்கையாளர்களிடமிருந்து வியாபரிகள் 60 ரூபாய் தொடக்கம் 80 ரூபாய் வரையிலான விலைக்கே கொள்வனவு செய்வதன் காரணமாக தோட்டச் செய்கையில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

images/content-image/2024/04/1712809186.jpg

 காய்கறிகளின் விலையில் மாற்றம் ஏற்பட்டிருந்த போதிலும் கிருமி நாசினிகள், நாளாந்த கூலி, பசளை உள்ளிட்டவற்றில் மாற்றம் ஏற்படவில்லை என தெரிவிக்கின்றனர். விவசாய பொருட்களின் விலை, வறட்சி உள்ளிட்ட சவால்களிற்கு முகம் கொடுத்து விவசாயத்தில் ஈடுபட்டு வரும் எமக்கு, செய்கைக்கு ஏற்ற விலை கிடைக்கவில்லை என கவலை வெளியிடுகின்றனர்.

images/content-image/2024/04/1712809202.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4