மதவாச்சியில் இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் பொலிஸாருக்கு விளக்கமறியல்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மதவாச்சியில் இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் பொலிஸாருக்கு விளக்கமறியல்!

மெதவாச்சி பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் இளைஞன் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு அதிகாரிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 மதவாச்சி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஒருவரை ஏப்ரல் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மெதவாச்சி பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் தனது மகனின் விதைப்பை சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக தாய் குற்றஞ்சாட்டிய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

இதன்படி சம்பவம் தொடர்பில் குறித்த இளைஞரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் பிரகாரம் அனுராதபுரம் வைத்தியசாலை பொலிஸார் கபிதிகொல்லேவ பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அறிவித்துள்ளனர்.  

பின்னர் கபித்திகொல்லாவ பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் சார்ஜன் மற்றும் கான்ஸ்டபிளை கைது செய்தனர்.  

சந்தேகநபர்கள் இருவரும் இன்று (11.04) கபிதிகொல்லேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். 

குறித்த இளைஞனின் இடது விரை சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் துலான் சமரவீர தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4