இந்தியா மற்றும் டுபாயில் இருந்து இலங்கை வந்த பிரஜைகள் கைது!

#SriLanka #Arrest #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இந்தியா மற்றும் டுபாயில் இருந்து இலங்கை வந்த பிரஜைகள் கைது!

இந்தியா மற்றும் டுபாயில் இருந்து வருகை தந்த  மூன்று பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துஇன்று (11) கைது செய்யப்பட்டுள்ளனர். 

வரி செலுத்தாமல், சுங்கத்திற்கு அறிவிக்காமல் சரக்குகளை கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கட்டுநாயக்க விமான நிலையம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 

அங்கு 111 வெளிநாட்டு மதுபான போத்தல்கள், நிறைய சிகரெட்டுகள் மற்றும் பல கணினி சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சந்தேகநபர்கள் கொழும்பு 13 மற்றும் மஸ்கெலியா பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4