வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் தீவின் ஏனைய பகுதிகளிலும் சில இடங்களில் லேசான மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் முன்னுரைத்துள்ளது. 

பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும் என்றும்  மத்திய, மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படுகின்றது.  

இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4