புதிய ஆண்டில் 'ஒரு நாடு' என்ற அடிப்படையிலான முன்னேற்றத்துக்கு காரணம் சமூக உறவுகளும் ஒற்றுமையுமே - ஜனாதிபதி

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe #New Year
Mayoorikka
2 years ago
புதிய ஆண்டில் 'ஒரு நாடு' என்ற அடிப்படையிலான முன்னேற்றத்துக்கு காரணம் சமூக உறவுகளும் ஒற்றுமையுமே - ஜனாதிபதி

புதிய ஆண்டில் 'ஒரு நாடு' என்ற வகையில் சரியான வழியில் முன்னேறுவதற்கு சமூக உறவுகளும் ஒற்றுமையுமே அடிப்படைக் காரணிகளாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

 தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவிப்பதாவது : 

 புதுப்பித்தல் வாழ்க்கைக்கு புதிய நம்பிக்கை தரும். புதுப்பிப்புக்களின் அடிப்படையிலேயே நாடு, உலகம் முன்னேற முடியும். புதிய சிந்தனைகளினாலேயே புத்தாக்கம் பிறக்கும். புதிய வருடம் பிறத்தல், புதிய நாட்காட்டி, பருவத்துக்குப் பருவம் ஏற்படும் புதிய மாற்றங்கள் உலக மக்களுக்கான வாய்ப்புக்களை புதுப்பிக்கின்றன. இந்த புதுப்பித்தல்களுக்குப் பின்னால் மற்றொரு மிக முக்கியமான விடயமும் உள்ளது. அதுவே சமூக ஒற்றுமையும் ஒருமைப்பாடும் ஆகும். தமிழ், சிங்களப் புத்தாண்டை உறவுகளையும் ஒற்றுமையையும் அடிப்படையாகக் கொண்டே புதுப்பித்துக்கொள்கிறோம்.

 உலக நாடுகள் அனைத்தும் இந்த சம்பிரதாயத்தைப் பின்பற்றியே புத்தாண்டு கொண்டாட்டங்களை கட்டமைத்துள்ளன. புத்தாண்டு நமக்கு சொல்லும் பாடத்தை இந்த தருணத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமானது என நம்புகிறேன்.

 புதிய ஆண்டில், ஒரு நாடு என்ற வகையில் சரியான வழியில் முன்னேறுவதற்கு சமூக உறவுகளும் ஒற்றுமையுமே அடிப்படைக் காரணிகளாகும் என்பதை நினைவுகூருவதோடு அனைவருக்கும் புத்தாண்டு பிறப்பு சிறப்பானதாக அமையட்டும் என பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4