மட்டக்களப்பில் கொட்டி தீர்க்கவுள்ள மழை : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

#SriLanka #weather #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மட்டக்களப்பில் கொட்டி தீர்க்கவுள்ள மழை : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 12.00 மணிக்கு. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

கிழக்கு மாகாணத்தில் காலை வேளையில் மழை பெய்யலாம் எனவும் தீவின் ஏனைய பகுதிகளில் லேசான மழை பெய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில்   75 மி.மீற்றர் வரை பலத்த மழை பெய்யக்கூடும்.  

மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.  

இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4