யாழ்ப்பாண மண்ணிற்கு பெருமை சேர்த்த இளம் துடுப்பாட்ட வீரர் வியாஸ்காந்த்!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த மத்திய கல்லூரியின் 22 வயதுடைய இளம் துடுப்பாட்ட வீரர்தான் விஜயகாந்த் வியாஸ்காந்த். இவர் 2020 இல் லங்கா பிரிமியர் லீக் சுற்றில் யாழ்ப்பாணம் கிங்ஸ் அணிக்காக தனது முதலாவது இருபது20 போட்டியில் விளையாடியதன் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தினார்.
அதனைத்தொடர்ந்து 2021 லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் விளையாடத் தேர்தெடுக்கப்பட்டார் மீண்டும் 2022 லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் யாழ்ப்பாணம் கிங்ஸ் அணிக்காக விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இத்தொடரில் மொத்தம் 13 இலக்குகளைக் கைப்பற்றி, அதிக இலக்குகளை வீழ்த்திய வீரர்களில் ஒருவராக இருந்தார். அதனைத் தொடர்ந்து வங்காளதேச பிரிமியர் லீகின் 2022-23 போட்டிகளில் சட்டோகிரம் சலஞ்சஸ் அணியில் விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வருடம் பன்னாட்டு லீக் டி20 சுற்றில் கலந்து கொள்வதற்காக எம்ஐ எமிரேட்சு அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
இச்சுற்றில் இவர் 8 இலக்குகளைக் கைப்பற்றி, அவரது அணிக்கு மிகவும் சிக்கனமான பந்துவீச்சாளராக, ஒரு ஓவருக்கு 5.43 ஓட்டங்கள் எடுத்தார். இவர் தனது முதலாவது முதல்-தரப் போட்டியை 2023 செப்டம்பர் 22 இல் தமிழ் யூனியன் அணிக்காக நொண்டெசிக்றிப்டு அணிக்கு எதிராக விளையாடினார்.
2024 ஏப்ரலில், 2024 இந்தியன் பிரீமியர் லீக் சுற்றில் விளையாடுவதற்காக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் வனிந்து அசரங்கவிற்காக சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
இந்தநிலையில் ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு தெரிவாளர்கள் பெயரிட்டுள்ள 32 வீரர்களைக் கொண்ட இலங்கை முன்னோடி குழாத்தில் வியாஸ்காந்த் பெயரிடப்பட்டுள்ளார்.
அண்மைக்காலமாக சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்திவரும் சகலதுறை ஆட்டக்காரர்கள் உட்பட சிறந்த வீரர்கள் பலர் குழாத்தில் இடம்பெறுகின்றமை யாழ்ப்பாண மண்ணிற்கு பெருமை சேர்க்கும் விடையமாக அமைந்துள்ளது.