வவுனியாவில் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபருடன் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட கொடூரம்!

#SriLanka #Vavuniya #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வவுனியாவில் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபருடன் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட கொடூரம்!

வெளிநாட்டில் இருந்து வருகைதந்துள்ள நபர் ஒருவருடன் சேர்ந்து புளியங்குளம் பொலிசார் தன்னை தாக்கியதாக தெரிவித்து வவுனியா வைத்தியசாலையில் குடும்பஸ்தர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

குறித்த சம்பவம் நேற்று (15.04) மாலை இடம்பெற்றுள்ளது. வவுனியா சின்னப்பூவரசங்குளத்தை சேர்ந்த ஒருபிள்ளையின் தந்தையே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . 

குறித்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கையில்,  நேற்றயதினம் ஒரு விசாரணை ஒன்று இருப்பதாக புளியங்குளம் பொலிசார் என்னை அழைத்தனர்.

நான் அங்கு சென்றநிலையில் எனது தொலைபேசி கைப்பை என்பன பறிக்கப்பட்டு இரு கையிலும் விலங்கு போடப்பட்டது. பொலிஸ்நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி உட்பட ஏனைய பொலிசாரும் என்னை பிடித்துவைத்திருக்க வெளிநாட்டில் இருந்து வருகைதந்திருந்த நபர் ஒருவர் பொலிஸ்நிலையத்திற்குள் வைத்து என்னை தாக்கினார்.

பின்னர் நாய்போல என்னை இழுத்துச்சென்ற அவர்கள் அந்த நபரின் வாகனத்தில் ஏற்ற முற்ப்பட்டனர். இதன்போது நான் போதுமக்களின் உதவியினை நாடி பிரதான வீதியை மறித்திருந்தேன். பின்னர் மீண்டும் என்னை பொலிஸ்நிலையத்திற்குள் இழுத்துச்சென்றனர். 

அங்கு பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி அவரது சப்பாத்து கால்களால் எனது நெஞ்சில் தாக்கினார். பின்னர் அங்கு வந்த பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் என்னிடம் வாக்குமூலம் பெற்றுவிட்டு பொலிஸ்நிலையத்தில் இருந்து என்னையும் எனது மனைவிபிள்ளைகளையும் வீட்டிற்கு அனுப்பியிருந்தார்.   

பொலிசார் தாக்கியதால் எனது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன். என்றார். இதேவேளை குறித்த விடயம் தொடர்பாக தாக்கப்பட்டவரின் மனைவி வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதுடன் வைத்தியசாலை பொலிசாரிடமும் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4