இந்திரா காந்தி கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்தது சரியானதே : ஆனந்தசங்கரி!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இந்திரா காந்தி கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்தது சரியானதே : ஆனந்தசங்கரி!

இந்திரா காந்தி கச்சதீவை இலங்கைக்கு கொடுத்தது சரியானது. பிழையான விடயத்தை இந்திராகாந்தி செய்ய மாட்டார் என தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். 

கிளிநொச்சியில் இன்று (18.04) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  ஆரம்பத்தில் கச்சதீவை ஒருவரும் தேடவில்லை. இலங்கை நெடுந்தீவு மீனவர்களும் இந்திய மீனவர்களும் சென்றுவருவது வழமை. 

சிறிமாவோ காலத்தில் இந்த தீவிற்கு  விடுதலைப்புலிகளால் பாதிப்பு என்ற கருத்தை இந்தியப்பிரதமரிடம் கோரிக்கையாக விடுத்தபோதே கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார். 

இதேவேளை  பொதுவேட்பாளர் என்று சொல்பவர்கள் 2004ம் ஆண்டு 26ஆசனங்கள் வைத்திருந்தபோது இனப்பிரச்சனையை தீர்த்திருக்க முடியும்.  மக்கள் இறக்கின்ற போது வாய் திறக்காதவர்கள் இப்பொழுது பொதுவேட்பாளர் பற்றி கதைக்கின்றனர்.என தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4