கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பில் யாழ்ப்பாணத்தில் விசேட கலந்துரையாடல்!

#SriLanka #Fisherman
Mayoorikka
2 years ago
கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பில் யாழ்ப்பாணத்தில் விசேட கலந்துரையாடல்!

வெவ்வேறு வடிவுகளில் வெவ்வேறு புத்தக வடிவில் இருக்கும் கடற்றொழில் சட்டங்களை ஒன்றிணைத்து தற்காலத்துக்கு ஏற்றவகையில் வகையில் கடற்தொழில் செயற்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டுவரும் புதிய சட்டமூல வரைபு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம்(19) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

 யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விருந்தினர் விடுதி மண்டபத்தில் யாழ் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் சுதாகரனின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில், புதிய சட்டமூலம் தொடர்பாக கடற்றொழில் திணைக்கபப் பணிப்பாளர் நாயகத்துடன் இணைந்து கடற்றொழில் அமைச்சின் சிரோஸ்ட ஆலோசகர் தவராசா வளவாளராக கலந்து கொண்டு சட்டமூலம் தொடர்பான கருத்துக்கள், ஆலோசனைகளை வழங்கினார்.

images/content-image/2024/04/1713509486.jpg

 குறித்த கலந்துரையாடலில் அமைச்சின் துறை சார் உத்தியோகத்தர்கள், அமைச்சின் சட்ட ஆலோசகர் மற்றும் துறசார் வல்லுநர்கள், சமாச உறுப்பினர்கள், யாழ் மாவட்ட கடற்தொழில் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

 குறித்த கலந்துரையாடலில், மீன்பிடி நடவடிக்கை உரிமம் வழங்கலில் உள்ள பொதுவான கோட்பாடுகள், மீன்பிடி உரிமத்தின் கால எல்லை, மீன்பிடி நடவடிக்கை உரிமங்களின் கைமாற்றம், வெளிநாட்டு கலன்கள் மூலம் இலங்கை நிலப்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுதலை தடை செய்தல் அல்லது கட்டுப்படுத்தல், இலங்கை நிலப்பரப்புகளில் மீன்பிடி செயற்பாடுகளை நடத்துவதற்கான மீன்பிடி உரிமமொன்றை புதுப்பித்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

images/content-image/2024/04/1713509502.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4