கம்பஹா பகுதியில் 12 மணித்தியால நீர்வெட்டு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கம்பஹா பகுதியில் 12 மணித்தியால நீர்வெட்டு!

சபுகஸ்கந்தவில் உள்ள மின்சாரத் தொகுதியில் ஏற்பட்டுள்ள அவசர திருத்தப் பணி காரணமாக கம்பஹாவில் இன்று (19.04) முதல் 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWS&DB) தெரிவித்துள்ளது.  

அவசர திருத்தப்பணிகள் காரணமாக பியகம நீர் சுத்திகரிப்பு பிரிவுக்கான நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.  

இதனால் பேலியகொட, ஜா-எல, கட்டுநாயக்க சீதுவ நகரசபை பகுதிகள், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, கட்டான, முனுவாங்கொட மற்றும் கம்பஹா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும். 

NWSDB ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருந்துவதுடன், போதுமான தண்ணீரை முன்கூட்டியே சேகரிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4